ETV Bharat / state

கத்தினா குத்துவேன்: பட்டா கத்தியுடன் பெண்களை மிரட்டிய கொள்ளையர்கள்

author img

By

Published : Jul 23, 2020, 10:43 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டிய கொள்ளையர்கள், வீட்டினுள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

dindigul
dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூரில் சண்முகம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சண்முகம் சொந்த பணியின் காரணமாக வெளியூர் சென்ற நிலையில், அவரது மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்தார். இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள், கோவிலூர் அருகே ரோஜா நகரில் உள்ள எழிலரசி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்கார பெண் மகாலட்சுமி, உடனடியாக எழிலரசிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பதறியடித்தபடி வீட்டிற்கு வந்த எழிலரசி கொள்ளையர்களை பார்த்து நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி, கூச்சலிட்டால் கொன்று விடுவதாக எழிலரசியை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, வீட்டினுள் இருந்த பொருள்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்தபோது, பக்கத்து வீட்டு பெண் மகாலட்சுமி தடுக்க முயன்றுள்ளார். அவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் இருவரும் தப்பித்துச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் சிசிடிவி கேமரா ஏதேனும் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: விடுபட்ட 444 உயிரிழப்பு - கரோனா எண்ணிக்கையில் சேர்த்து சுகாதாரத் துறை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.