ETV Bharat / state

அரசு மருத்துவரை வெட்டிவிட்டு 100 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை.. திண்டுக்கல் பகீர் சம்பவம்!

பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு, 100 பவுன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவரை கத்தியால் தாக்கி நகை பணம் கொள்ளை;மர்ம நபர்களை தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

author img

By

Published : Apr 14, 2023, 1:38 PM IST

அரசு மருத்துவரை வெட்டிவிட்டு 100 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை.. திண்டுக்கல் பகீர் சம்பவம்!

திண்டுக்கல்: உதயகுமார் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் பழனி அண்ணாநகரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் உதயகுமார், பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

உதயகுமாரின் மகள் மருத்துவ மேல் படிப்பிற்காகச் சென்னையில் இருப்பதால், மகளைப் பார்க்க இவரது மனைவியும் சென்னை சென்றுள்ளார். இதனால், உதயகுமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை(ஏப்ரல் 14)தூங்கிக் கொண்டிருந்த மருத்துவர் உதயகுமாரை முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள் எழுப்பியதை அடுத்து, அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பயத்தில் கூச்சலிட முயன்ற மருத்துவர் உதயகுமாரை, கத்தியால் தாக்கிய முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள் அவரை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றனர்.

இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாளும், கோயில் திருவிழாவும் ஒரே நேரத்தில் ஏன் நடத்த கூடாது? - நீதிமன்றம் கேள்வி!

கொள்ளையர்கள் சென்ற பிறகு மருத்துவர் உதயகுமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்த போது இரத்த வெள்ளத்தில் கட்டப்பட்ட நிலையிலிருந்துள்ளார். எனவே, அருகிலிருந்தவர்கள் உடனடியாக உதயகுமாரை மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர் உதயகுமாருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகரக் காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "நிலவில் இருந்து பார்த்தாலும் இனி தமிழ் தெரியும்" - அமைச்சர் மெய்யநாதன் அறிவித்த புதிய திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.