திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ஸ்ரீரங்ககவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரின் தந்தை குப்பணகவுண்டர் 95 வயதான இவர் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக ஒரு வாரத்திற்கு முன்பு அலுவலர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் வெங்கடாச்சலம் வெளியூரில் வசித்து வருவதால் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதனிடையே ஆக்கிரமிப்பிற்கு நேற்று ஆக்கிரமிப்பு அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
மேலும் வெங்கடாச்சலம் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தோ, தனக்கு எந்தவொரு தகவலும் அளிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுத்த படுக்கையாக இருக்கும் எனது தந்தையை கட்டிலுடன் அப்புறப்படுத்தி குடியிருந்த வீட்டை காவல் துறை உதவியுடன் அவசர அவசரமாக இடித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தனக்கு மாற்று இடம் இல்லாததால் வீட்டை இடிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டும் அலுவலர்கள் செவி சாய்க்கவில்லை என்றும், எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கடாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் அலுவலர்கள் பக்தர்களை தாக்க முயற்சி - எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்