ETV Bharat / state

மணல் கொட்டுவதில் தகராறு - செவியை கடித்து துப்பிய நபரால் பரபரப்பு - வேடசந்தூரில் பயங்கரம்

திண்டுக்கல் அருகே கட்டட பணிக்காக மணல் கொட்டுவதில், ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்து துப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர் அருகே மணல் கொட்டிய தகராறில் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

author img

By

Published : Apr 13, 2022, 5:46 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூனை கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் வீட்டின் முன்பாக மணல் கொட்டி வைத்துள்ளார்.

அவரது வீட்டின் அருகே இருந்த காந்திராஜனுக்கு அது இடையூறாக இருந்ததால் காந்தி ராஜனுக்கும் ஆனந்த்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த காந்திராஜன் ஆனந்த்குமாரின் வலது பக்க காதை துண்டாகும் அளவில் கடித்து துப்பிவிட்டார்.

ஆனந்த்குமார் இதனை அடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். ஆனந்த் குமாருக்கு பணியில் இருந்த டாக்டர் மகாராஜன் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:மதுபோதையில் தகராறு: நண்பனை மாடியிலிருந்து தள்ளிவிட்ட 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.