திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராம் (32). கொத்தனார் வேலை செய்துவரும் இவர் வழக்கம்போல் நேற்று வேலைக்குச் சென்றார். அவரது மனைவி பாண்டிச்செல்வியும் அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 12 பவுன் நகையும் 1000 ரூபாய் ரொக்கத்தையும் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் வீடு திரும்பிய பாண்டிச்செல்வி கதவிலிருந்த பூட்டு உடைந்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தங்கநகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து பொன்ராம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்கதிருமணத்தில் மகளுக்குத் தர வைத்திருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை!: