திண்டுக்கல் மாவட்டம் வீரசிக்கம்பட்டியில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்க இருபதுக்கும் மேற்பட்டோர் மினிலாரியில் சென்றுள்ளனர். மினிலாரியை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பூத்தன் ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது ஆரியநல்லூர் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - ரேலா மருத்துவமனை