திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பத்தாம் வகுப்பு படித்த மாணவி, அந்தப் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளார்.
இவரை இந்தக் கோயிலில் பூசாரியாக உள்ள சின்னப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் (66), மிரட்டிப் பேசி கடந்த 7ஆம் தேதிமுதல் கோயில் கருவறை அருகே உள்ள பகுதியில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி வீட்டை விட்டு பள்ளிக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் கொடைக்கானல் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த கொடைக்கானல் காவல் துறையினர் காணாமல்போன மாணவியைத் தேடினர்.
இந்நிலையில் நாயுடுபுரம் பகுதியில் மாணவி கோயில் பூசாரியால் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:பெற்ற தாயை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன் கைது!