ETV Bharat / state

'அரியர் பாய்ஸ் நாங்க எங்க சாய்ஸ் நீங்கள்' - எடப்பாடி பழனிசாமிக்கு கல்லூரி மாணவர்கள் ஆதரவு - election news

திண்டுக்கல்: நத்தம் தொகுதியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரைமேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் 'அரியர் பாய்ஸ் நாங்க எங்க சாய்ஸ் நீங்கள்' என ஆதரவு குரல் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் பரப்புரை
அவசர ஊர்திக்கு வழி விட்டதால் அங்கிருந்த மக்கள் கைதட்டி, விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
author img

By

Published : Mar 25, 2021, 4:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆருக்கு, நாம்தான் வாரிசுகள். கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்தபோது வாங்காத மனுக்கள், இப்போது வாங்கி என்ன பயன் ஸ்டாலினுக்கு.

தற்போது திமுக நிலைமை பரிதாபமாக உள்ளது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளிக்கு இந்தத் தேர்தல்தான் வாய்ப்பு மக்களுக்கு. 2015 வாங்கிய மனுக்கு என்னாச்சு திமுகவிடம் மக்கள் கேட்கிறார்கள்.

நத்தத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனுமதி பெற்று நத்தம் பகுதியில் மலை கிராமங்களுக்கு, தார்ச்சாலை அமைக்கப்படும்.

நொச்சி ஓடைப்பட்டியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும். நத்தம் நகரில் மின் மயானம் அமைக்கப்படும். நத்தம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றப்படும்” எனப் பேசினார்.

இதனிடையே பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ளும்போது, அவ்வழியாகச் சென்ற 108 அவசர ஊர்தி, கூட்டத்தில் மாட்டிக்கொண்டது.

அப்போது முதலமைச்சர் தொண்டர்களிடம், அவசர ஊர்திக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொண்டார். உடனே அங்கு இருந்த தொண்டர்கள், பொதுமக்கள் வழிவிட்டனர்.

இதனால் சிறிது நேரம் பரப்புரை தடைப்பட்டது. அவசர ஊர்திக்கு வழிவிட்டதால் அங்கிருந்த மக்கள் கைத்தட்டி, விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் நத்தத்தில் பரப்புரை செய்யும்போது, அங்கு வந்த கல்லூரி மாணவர்கள், 'அரியர் பாய்ஸ் நாங்க எங்க சாய்ஸ் நீங்கள்' எனக் குரல் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையால் 20 மீனவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.