திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே, நத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர், வேடசந்தூரில் நிதி நிறுவனமும், கதிர் என்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோவும் நடத்தி வந்தார்.
நேற்றுமுந்தினம் (மார்ச் 10) இரவு, வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட இவர், கூட்டம் முடிந்ததும், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான கொலை
இந்நிலையில், அவரது தோட்டத்தின் அருகே தலையில் காயங்களுடன், எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். நேற்று (மார்ச் 11) காலை அவ்வழியாக சென்ற மக்கள், இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாலசுப்ரமணியின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக, வேடசத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: WATCH: பால் வாங்க சென்ற பெண்ணிடம் செயினைப் பறிக்க முயற்சி