திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பகலவன் ராஜா. யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த துணை நடிகை திவ்யா பாரதி தன்னை ஏமாற்றி ரூபாய் 30 லட்சம், பத்து சவரன் நகை மோசடி செய்து விட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைக்காக திவ்ய பாரதியை அழைத்தனர். விசாரணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த, திவ்யபாரதி யூடியூப் சேனல் நடத்தும் பகலவன் ராஜா தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பொய் புகார் அளித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததார்.
தனது புகாரில் பகலவன் ராஜா கவிதைகளுக்கு விளம்பர மாடலாக நடித்துக் கொடுத்ததற்கு மட்டுமே பணம் வாங்கினேன். எந்தவித ஆசை வார்த்தைகளும் நான் கூறவில்லை. மேலும் தனக்கு இயக்குநர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததாகவும், தன்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் திவ்ய பாரதி விசாரணையில் பகலவன் ராஜா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதற்கு இடையே நேற்று யூடியூப் சேனல் நடத்தும் பகலவன் ராஜா திவ்யபாரதியை பல்வேறு அவதூறுகளை கூறி ஆடியோ ஒன்றினை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோவினை கேட்ட திவ்யபாரதி தன் மீது வேண்டுமென்றே யூடியூப் இயக்குநர் தொடர்ந்து மோசடி புகார் தெரிவித்ததாக வருவதாக கூறி திண்டுக்கல் மாலைப்பட்டி அருகே உள்ள தனது தங்கை வீட்டில் இன்று விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.
அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். துணை நடிகை திவ்யபாரதி, சூரரைப் போற்றி, ஈஸ்வரன், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்ய பாரதிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த நடிகை திடீர் மாயமானார். இதைக்கண்ட செவிலியர்கள் மருத்துவரிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டு மாடு தாக்கி தொழிலாளி பலி