கொடைக்கானல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் ஓடைப்பகுதியில் பூக்கும் குறிஞ்சி பூக்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி பூக்கள் பல்வேறு பகுதிகளில் 2018-ஆம் ஆண்டு பூத்துக் குலுங்கியது. இதனைத் தொடர்ந்து 2030-ஆம் ஆண்டு பூக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிஞ்சிப் பூக்களில் பல்வேறு வகையான பூக்கள் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் 30 வகையிலான குறிஞ்சி மலர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தற்போது ஓடை குறிஞ்சி எனப்படும் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்த வகை பூக்கள் பல்வேறு ஓடைகளுக்கு அருகே பூத்துக் குலுங்கி வருகிறது. இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலை துறையினர் இணைந்து ஓடை குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் செடிகள் உள்ளிட்டவைகளை சேகரித்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர் . இந்த வகை பூக்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு டும்.. டும்.. டும்...