ETV Bharat / state

பள்ளி மாணவர்களின் தந்தைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி! - திண்டுக்கல்லில் தந்தைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகராறில் ஒருவர் பலி
author img

By

Published : Oct 25, 2019, 1:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், முருகனின் மகன் உமாநாத்திடம் 'ஏன் ஒழுங்காக படிக்காமல் இருக்கிறாய்' என்று திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன், "என் மகனை ஏன் நீ கண்டிக்கிறாய்?" என்று கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், முருகன், லோகநாதனை கீழே தள்ளியுள்ளார். இதில் தவறி விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.

பின்பு, அருகில் உள்ளவர்கள் மன்னவனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் லோகநாதன் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தந்தைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு

இதுகுறித்து லோகநாதன் மனைவி சாந்தி, கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். இதனையடுத்து, மாணவர் உமாநாத் அவரது தந்தை முருகன் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : அரசுப் பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதல்: திருமணமான மூன்றே மாதத்தில் காவலர் உயிரிழப்பு!

Intro:திண்டுக்கல் 26.10.19

கொடைக்கானல் அருகே பூண்டியில் பள்ளி மாணவர்கள் இருவரின் தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் கீழே விழுந்து ஒரு பள்ளி மாணவனின் தந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரணை

Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (61) விவசாயி. இவரது மகன் சிவமுருகன் (15) இதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் (48) விவசாயி இவரது மகன் உமாநாத் (15) இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது மகன்களுக்கு மதிய உணவை எடுத்துக்கொண்டு பெற்றோர்கள் இருவரும் பள்ளிக்கு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லோகநாதன், முருகன் மகன் உமாநாத்திடம் ஏன் ஒழுங்காக படிக்காமல் இருக்கிறாய் என்று திட்டிஉள்ளதாக கூறப்படுகிறது. இதில் என் மகனை ஏன் கண்டிக்கிறாய் என்று முருகன் கேட்கும்பொழுது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முருகன் லோகநாதனை கீழே தள்ளியுள்ளார். இதில் தவறி விழுந்த அவர் சுயநினைவை இழந்துள்ளார். அவரை அருகில் உள்ளவர்கள் மன்னவனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லோகநாதன் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அவரது மனைவி சாந்தி கொடைக்கானல் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி ஆத்மநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து லோகநாதன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டுவந்தனர். அத்துடன் மாணவர் உமாநாத் அவரது தந்தை முருகன் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.