திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை மாலை அடிவாரம் கிரிவீதியில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட சூரன்களின் உருவங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. அதன்படி சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இங்கு தயார் செய்யப்படும் சூரர்களின் உருவங்கள் நாளை சூரசம்ஹாரத்தின் போது முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை