ETV Bharat / state

திமுகவினரால் ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்: துரிதமாக செயல்பட்டு மீட்ட எஸ்.ஐ! - அம்மையநாயக்கனூர்

ரயில் கேட்டை அடைக்க விடாமல் காரில் நீண்ட வரிசையில் சென்ற திமுக கட்சியினரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனத்தை, துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசால் பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

dindigul
திண்டுக்கல்
author img

By

Published : Jul 1, 2023, 12:24 PM IST

திமுகவினரால் ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்

திண்டுக்கல்: நிலக்கோட்டை அடுத்து அம்மைநாயக்கனூர் பேரூராட்சி 13ஆவது வார்டு, 8 நாயக்கர் காலனியில் பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக மாவட்டச்செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் வந்திருந்தார்.

அந்நிகழ்விற்கு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி கொடைரோடு வந்தார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்களில் வரவேற்பு அளித்தனர். வரவேற்பிற்குப் பின்பு அரசு நிகழ்ச்சி நடக்கும் ஏத்து நாயக்கர் காலனிக்கு வாகனங்களில் செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது.

அப்போது மாலை 6.20 மணியளவில் நெல்லையிலிருந்து தாதர் மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டு, அலாரம் எச்சரிக்கை ஒலித்துக் கொண்டு இருந்தது. அப்பொழுது ரயில்வே கேட் அடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கும்பலாக வந்த திமுகவினர் கேட்டை அடைக்க விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கேட்டை அடைத்துக் கொண்டிருந்த ரயில்வே கேட்கீப்பர், கேட்டை பாதி அளவில் நிறுத்தியுள்ளார். பின் அதன் வழியாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஊர்வலமாக கட்சியினரால் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் அழைத்துச் சென்றனர். அப்பொழுது ரயில்வே கிராசிங்கில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நடு ரயில் பாதையில் பள்ளியின் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டது.

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் கேட்கீப்பர், அங்கிருந்த போலீசார் ஆகியோர் பதற்றம் அடைந்தனர். ரயில் வருவதற்கு சிறிது நிமிடமே இருந்த நிலையில், என்ன செய்வதென்று புரியாமல் வாகனங்களை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் வாகனங்களால் செல்ல முடியவில்லை.

பின்னர் அம்மைநாயக்கனூர் எஸ்ஐ கருப்பையா துரிதமாக செயல்பட்டு அனைத்து வாகனங்களையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி கேட்டை மூடிய ஒரு சில நிமிடத்தில் அதிவேகமாக வந்த ரயில் கேட்டை கடந்து சென்றது. ரயில் கடந்த சென்ற பின்புதான் அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினர், கேட்கீப்பர் உள்ளிட்ட அனைவரும் பெருமூச்சு விட்டதோடு, நிகழவிருந்த சம்பவத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ரயில்வே சிக்னல் கிடைக்கப்பெற்று எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பப்பட்ட பின்பு வலுக்கட்டாயமாக ரயில் கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்த திமுகவினரால் மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்த சூழ்நிலையில், அதிர்ஷ்டவசமாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் முயற்சியால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது கட்சியின் தொண்டர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், பொது மக்களுக்கு இடையூறும் விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நடந்து கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்க வேண்டும் எனவும் அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னை திருமங்கலம் சிக்னலில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்.. காவல் துறை பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.