ETV Bharat / state

திண்டுக்கல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா! - திண்டுக்கல், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில், கும்பாபிஷேக விழா

திண்டுக்கல்: நூறு வருடங்கள் பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

temple-at-dindigul
author img

By

Published : Sep 1, 2019, 11:19 PM IST

திண்டுக்கல் மாவட்டம் மேட்டு ராஜக்காபட்டியில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நூறு வருடங்கள் பழமையான இக்கோயிலில், அண்மையில் ஒரு கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதில், புதிதாக ஐந்தடி உயரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிக உயரம் கொண்ட சுப்பிரமணிய சுவாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக பூஜை நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை மூலவர் சன்னிதான கோபுரமான ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா

இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் அருள்பெற்றனர். பின்னர், விழாவில் ஆயிரக்கனக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Intro:திண்டுக்கல் 01.09.19

திண்டுக்கல் மேட்டு ராஜக்காபட்டியில் 100 வருடங்கள் பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

Body:திண்டுக்கல் மேட்டு ராஜக்காபட்டியில் 100 வருடங்கள் பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தற்பொழுது ஒரு கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக 5,1/2 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கல் சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிக உயரம் கொண்ட சுப்பிரமணிய சுவாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 30-ஆம் தேதி முதற்கால பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மூன்று தினங்களாக நான்கு கால பூஜை செய்யப்பட்டு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை யாக பூஜையில் வைத்து வேத மந்திரங்கள் முழங்க இன்று 01.09.19 காலை மூலவர் சன்னிதான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற்றுச் சென்றனர். இதனை முன்னிட்டு மேட்டு ராஜக்காபட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.