விவசாயி இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் தனக்கும் சொந்தமான நிலமும் இருப்பதாக தொழிலதிபர் நடராஜன் பிரச்னை செய்து வந்தார்.
இன்று (நவ.16) விவசாயி இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைக்க சென்றார். அங்கு நுழையக்கூடாது என தொழிலதிபர் நடராஜன் தெரிவித்தார்.
அப்போது விவசாயி இளங்கோவனின் உறவினர்கள் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர். இவர்களின் பேச்சுவார்த்தை மோதலாக மாறியது. ஆவேசமடைந்த தொழிலதிபர் நடராஜன் கைத்துப்பாக்கியைக் கொண்டு உறவினர்கள் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரை சுட்டார். அதிர்ச்சியடைந்த விவசாயி இளங்கோவன் தப்பியோடினார்.
இதில் உறவினர்கள் சுப்பிரமணிக்கு வயிற்றிலும், பழனிசாமிக்கு இடுப்பிலும் குண்டு பாய்ந்தது. பின்பு தொழிலதிபர் நடராஜன் அங்கிருந்து சென்றார். இதையறிந்து மீண்டும் வந்த விவசாயி இளங்கோவன் உறவினர்கள் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பழனிசாமி உடல்நிலை மோசமானதால் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த டிஎஸ்பி சிவா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை செய்து தப்பியோடிய தொழிலதிபர் நடராஜனை கைது செய்தனர். தொழிலதிபர் விவசாயிகளை கைத்துப்பாக்கியால் சுடும் சிசிடிவி கேமரா பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 செண்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்திற்கு அருகே வசித்து வருபவர் தொழிலதிபர் நடராஜன். இவர் தனக்கும் அந்த இடத்தில் நிலம் உள்ளது எனக்கூறி ஏற்கனவே பிரச்னை செய்து வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்துள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு - கள்ளச்சாராய வியாபாரிகள் கைது