திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ளது நட்சத்திர வடிவிலான ஏரி. சர்.லெவின்ஜ் என்பவரால் உருவாக்கப்பட்ட நட்சத்திர ஏரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, இறுதியில் சங்கமிக்கும் இடமாக உள்ளது.
5 கிமீ சுற்றளவில் அமைந்துள்ள இந்த ஏரியை சுற்றி அதிகாலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களும் நடைபயிற்சி செய்வார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறை பனி சீசன் தொடங்கும். தற்போது, உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் வெண்ணிற கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கிறது.
தொடர்ந்து குளிர் அதிகரித்து வருவதால் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கொடைக்கானலில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் குறைந்த அளவாக பதிவாகியுள்ளது. இனி வரும் நாள்களில் குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது!