திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நாயுடுபுரம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் கரூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கி இருப்பதாக வருவாய்த்துறை கோட்டாசியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த விடுதியில் சோதனை மேற்கொண்டதில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து விதிகளை மீறி விடுதிகளில் தங்கியிருந்த பயணிகளையும், அவர்களுக்கு அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதி ஊழியர்களையும் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
பின்னர், அரசு விதிகளை மீறி சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த விடுதிக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், அரசு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்த கணவர் - மனைவி தீக்குளித்து தற்கொலை!