ETV Bharat / state

'பெகாசஸ் தொடர்பாக மோடி, அமித் ஷா மீது முழு நேர விசாரணை நடத்துக!' - dindugul district news

ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர், உள் துறை அமைச்சர் மீது முழு நேர விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

palani_exmla
palani_exmla
author img

By

Published : Jul 23, 2021, 9:16 PM IST

திண்டுக்கல்: பழனியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலருமான சசிகாந்த் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”நாட்டில் கடந்த சில நாள்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டுவரக்கூடிய பொருளாக இருந்துவருகிறது முக்கியப் பிரபலங்களின் செல்போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்ட விவகாரம். ஒன்றிய அரசு முக்கியப் பிரபலங்களின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்டு அதன்மூலம் மிரட்டிவருகிறது.

உதாரணமாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியவர். ஓய்வுபெற்ற சில மாதங்களில் ஒன்றிய அரசு அவருக்கு நியமன எம்பி பதவி வழங்கியுள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுகேட்டதாக வெளியாகியுள்ள செல்போன் அழைப்புகள் பட்டியலில் ரஞ்சன் கோகாயுடைய செல்போன் அழைப்பு இல்லை.

பின்புலமாக ஒன்றிய அரசு

ஆனால் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்த பெண்மணியினுடைய செல்போன் அழைப்பு, அவருடைய உறவினர்களின் செல்போன் அழைப்புகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் யார் என்பதைப் பார்க்கும்போது அதன் பின்புலமாக ஒன்றிய அரசு உள்ளது தெரியவருகிறது.

மேலும் இவர்கள் செல்போன் அழைப்புகளை மட்டும் ஒட்டுக்கேட்டது மட்டுமல்லாமல் ஹேக் செய்து சட்டத்துக்கு விரோதமான பதிவுகளையும் பதிவிட்டுள்ளன. ஒன்றிய அரசு இந்தப் பிரத்யேக மென்பொருளை யார் வாங்கியது, இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்ற தகவல்களை வெளியிட வேண்டும்.

ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர், உள் துறை அமைச்சர் மீதும் முழு நேர விசாரணை நடத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சசிகாந்த் செய்தியாளர் சந்திப்பு

சிறப்பாகச் செயல்படும் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அனைத்துச் செயல்பாடுகளும் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல உள்ளது. அனைத்து விஷயங்களிலும் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்த பிறகு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது தொடர்ந்து நடைபெறவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பெகாசஸை பயன்படுத்திய மோடி, அமித்ஷா- ராகுல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.