ETV Bharat / state

பழனியில் ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டம்! - sanitation workers protest in Dindigul

Palani news: ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழனியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 1:56 PM IST

ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

திண்டுக்கல்: ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (நவ.14) காலை 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் இருந்து பணியாளர்களைப் பெற்று, தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது. பழனி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நாள்தோறும், நூறு தூய்மைப் பணியாளர்களை பணிக்கு அனுப்பி வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில், பழனியில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்த பணியாளர்கள், தங்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் நடுரோட்டில் ரவுண்ட் அடித்து அலப்பறை.. இளைஞரைத் தூக்கிய போலீசார்!

இதனையடுத்து இன்று ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறியும், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பழனி நகராட்சியில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே மீண்டும் பணிக்குச் செல்வோம் என்று கூறி பணியை புறக்கணித்து, நகராட்சி அலுவலகம் முன்பாக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழனி நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிவு; 3 ஆவது நாளாகத் தொடரும் மீட்புப் பணி - 40 பேரின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.