திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியைச் கிருபானந்தம்(19), டார்வின் சிங், ஜெய்பிரகாஷ் ஆகியோர் கூட்டாக முடித்திருத்தம் செய்யும் தொழிலாளியின் 12 வயது சிறுமியை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அப்போது சிறுமி அளித்தப் புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முடி திருத்தும் நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் என தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 2,500 சலூன் கடைகள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. நகரம், கிராமம் வேறுபாடின்றி திண்டுக்கலில் அனைத்துப் பகுதியிலும் முடிதிருத்த நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி