திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுள்ளான் என்கிற ரமேஷ். இவர் மீது ஏற்கனவே பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் பாரதிபுரம் பாண்டி கோயில் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் ரமேஷ் (24) வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தகவலறிந்ததும் திண்டுக்கல் தாலுகா காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல் கொலை நடந்த இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். இது தொடர்பாக தாலுகா காவல் துறை வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முன்பகை காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தலை இல்லாமல் நடுரோட்டில் கிடந்த ரவுடி... கையில் தலையுடன் ஆஜரான மூன்று பேர்