ETV Bharat / state

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பேரிடர் மேலாண்மைத் துறை அவசர ஆலோசனை!

சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து பழனியில் பேரிடர் மேலாண்மைத் துறையினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Disaster Management Department
பேரிடர் மேலாண்மைத் துறை
author img

By

Published : May 15, 2021, 11:48 AM IST

திண்டுக்கல்: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாட்டி ஐந்து மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கடும் மழை பெய்யக் கூடும், வெள்ள அபாயம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (மே.14) பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

பேரிடர் மேலாண்மைத் துறை ஆலோசனை

இந்த ஆலோசனை கூட்டத்தில், நீர்தேக்க விவரங்கள், வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரிடர்‌ காலத்தில் தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைவரும் தயார் நிலையில் இருக்கவும், பொதுமக்களை பாதுகாக்க தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் மழை வெள்ளத்தின் போது மரங்கள் கீழே விழுந்தால் உடனடியாக எப்படி அகற்றுவது குறித்தும், தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் அவர்களை மீட்டு எங்கே தங்க வைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பழனி கோட்டாட்சியர் ஆனந்தி, பழனி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர்கள், பேரிடர் மீட்புத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: முதல் தவணைத் தொகை இன்று வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.