மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முக்குலத்தோர் சமூகத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் அமைப்பின் சார்பாக இன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்கு முயற்சித்தனர். ஆனால் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததன் காரணமாக உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. தங்களது கோரிக்கையை வலியுறுத்திப் போராட அனுமதிக்காத காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க கோரி திண்டுக்கலில் போராட்டம்!
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.