தமிழ்நாட்டில் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்து கொண்டும் கரோனா தடுப்பூசி போட்டும் வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்காக இன்று (மே 6) காலை 8 மணி முதல் வந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். அரசு மருத்துவர்களிடம் கேட்கும்பொழுது தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என கூறினர்.
நாளொன்றுக்கு 100-முதல் 150-பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள கின்றனர். மேலும், டோக்கன் வழங்கப்பட்டு ஊசி செலுத்தி வருகின்றனர். உடனடியாக அரசு தடுப்பூசிகளை அரசு தாமதமின்றி மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.