திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையாகியுள்ளது.
விவசாய நிலங்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாது, விரட்ட வரும் விவசாயிகளையும் யானைகள் அச்சுறுத்திவருகிறது.
யானைகளால் தொடரும் சோகம்
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க கூடுதல் வனக்காவலர்கள் நியமிக்க வேண்டுமென தமிழ்நாடுஅரசுக்கும், வனத்துறைக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டுயானை முகாம்