திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய புதுப்பட்டி ஊராட்சிமன்றத்திற்கு உள்பட்ட முத்துராம்பட்டி கிராமத்தில், கிழக்கு மற்றும் மேற்கு தெருவிற்கு, அரசின் புதிய திட்டத்தின்படி 10 நபர்கள் மேற்பட்டோருக்கு தனிநபர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நன்றாகத் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், சிறிது நாள்களுக்கு முன்பு சிண்ட்டெக்ஸ் பழுதானதால் பலமுறை கூறியும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அதனை சரி செய்ததால் ஆத்திரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பகுதியில் உள்ள அனைத்து குடி நீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் முத்துராம்பட்டி கிராமமக்கள் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் முறையாக இணைப்பு கொடுக்காவிட்டால் தாங்களே சரி செய்து கொள்வோம் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துவிட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை தூங்குகிறதா?'