தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.
அதனடிப்படையில், திண்டுக்கல்லில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கட்டுமான பணிகளுக்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளான சிமெண்ட், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக் கடைகள், மின் சாதன பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 9 மணியிலிருந்து 2 மணிவரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 48 வார்டுகளையும் ட்ரோன் கேமரா மூலம் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது குறுகிய சாலைகளில் அனுமதியற்ற கடைகள் திறந்திருந்தால் அதை உடனடியாக அடைக்க உத்தரவிட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளான முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் தகுந்த கடைபிடிக்கப்படுகிறதா என்றும் கண்காணித்தனர்.
இதையும் பார்க்க: ஊரடங்கால் அதிகரித்த ட்ரிம்மர் விற்பனை!