திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு கரோனா ஆரம்பித்த நாள் முதல் வாழ்வாதாரம் இன்றி பெரும்பாலான மலை கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் தொடர்ந்து மலை கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கேசி பட்டியை சேர்ந்த கோபிக்கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நிவாரண பொருள்களான அரிசி, சேலை, போர்வை ,வேஷ்டி, உள்ளிட்ட நிவாரண பொருள்கள் மலை கிராம மக்களுக்கு, திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார். சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருள்களை கேசி பட்டி , எழுதரைக்காடு, குறவனச்சி ஓடை, கடையமலை , கோரம்கொம்பு , நல்லூர்காடு ஆகிய கிராமத்தை சேர்ந்த 200 குடும்பங்கள் வாங்கி சென்றனர். தொடர்ந்து 50 காவலர்களுக்கு மழை நேரங்களில் பயன்படுத்தும் ஆடைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காவல் துணைக்காணிப்பாளர் ஞானசேகரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நக்சலைட் சிறப்பு அலுவல் பிரிவு ஆய்வாளர் ஜெயசிங் உள்ளிடோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொடைக்கானல் மலை சாலையில் ஆபத்தான மரங்களை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை!