மதுரையில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சங்கமம் மாநாட்டில் பட்டியலின வகுப்பிலுள்ள ஏழு உட்பிரிவுகளை குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிரியான் ஆகியவற்றை இணைத்து ஒரே பெயராக தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கருத்திற்கு தேவேந்திர வேளாளர் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் வெள்ளாளர், வேளாளர் என்ற தங்களது குலப்பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய அரசு, தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் முருகனை கண்டிப்பதாகக் கூறி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நத்தம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.