திண்டுக்கல்: திருக்கார்த்திகை நாளன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காகவே நத்தம் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் வருடந்தோறும் மண்ணால் ஆன விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
இவைகள் திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு லட்சுமி விளக்கு, பிள்ளையார் விளக்கு, மேஜிக் விளக்கு, அன்னம் விளக்கு, மயில் விளக்கு, குத்து விளக்கு, அடுக்கு விளக்கு உள்ளிட்ட 50 வகையான மாடல்களில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த விளக்குகள் ஒரு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா
கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக விளக்குகள் விற்பனை குறைவாக இருந்ததாகவும் தற்போது தளர்வுகள் உள்ளதால் விற்பனை நன்றாக உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விளக்குகள் தயாரிப்பு தீவிரம்
கார்த்திகை திருநாள் நெருங்கி வருவதால் தீப விளக்குகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் விளக்குகளை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக... சென்னை காவல் துறையில் நடமாடும் 'ட்ரோன்' பிரிவு