ETV Bharat / state

திண்டுக்கல்லில் கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு!

author img

By

Published : Oct 23, 2019, 2:23 PM IST

திண்டுக்கல்: சாலையோரம் சடலமாகக் கிடந்த நிறைமாத கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

pregnant-lady-dead-body-found-in-dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கவுண்டச்சிபட்டி என்ற ஊரில் நிறைமாத கர்ப்பிணி சாலையோரமாகப் பிணமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் வேடசந்தூர் வசந்த நகரில் குடியிருந்து வரும் தினேஷ் குமார் என்ற மில் தொழிலாளியின் மனைவி சுஷ்மிதா என்பது தெரியவந்துள்ளது.

கர்ப்பிணி பெண் சடலம் மீட்பு

சுஷ்மிதா பழங்கள் வாங்கிக்கொண்டு தனது மாமனார், மாமியாரை பார்க்க அங்கு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சுஷ்மிதா கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி சங்கிலி காணாமல் போயிருப்பதாகவும் அவரின் மாமியார் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், நகைக்காக அப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணி பெண் பிணமாக இருந்து 5 மணி நேரத்துக்குப் பின்பு மீட்கப்பட்டதால் வயிற்றில் இருந்த சிசு இறந்துவிட்டதாகக் கூவக்காபட்டி வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். மேலும் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: டோல்கேட்டில் வரி செலுத்த மறுப்பு; நாம் தமிழர் பிரமுகருக்கு அடி உதை!

Intro:திண்டுக்கல். 23.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையோரமாக பிணமாக மீட்பு கழுத்தில் இருந்த 5 சவரன் நகை மாயமானதால் கொலையா என மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை

Body:திண்டுக்கல். 23.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையோரமாக பிணமாக மீட்பு கழுத்தில் இருந்த 5 சவரன் நகை மாயமானதால் கொலையா என மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கவுண்டச்சிபட்டி என்ற ஊரில் நிறை மாத கர்ப்பிணி சாலையோரமாக பிணமாக கிடந்துள்ளார் இதை பார்த்த அப்பகுதி மக்கள் கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் வேடசந்தூர் வசந்த நகரில் குடியிருந்து வரும் தினேஷ் குமார் என்ற மில் தொழிலாளியின் மனைவி சுஷ்மிதா 19 என்பது தெரியவந்துள்ளது மேலும் இவர் நிறைமாத கர்ப்பிணியாக கைப்பையில் பழங்கள் வாங்கிக் கொண்டு வந்ததும் தனது மாமனார் மாமியாரை பார்க்க அங்கு வந்ததாகவும் இந்நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார் இதைத்தொடர்ந்து சுஷ்மிதாவின் மாமியார் போலீசாரிடம் கூறியது கழுத்திலிருந்த 5 சவரன் தாலிக்கொடி மாயமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா வேறு ஏதும் காரணமா என மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் நிறைமாத கர்ப்பிணியான பெண் பிணமாக இருந்து 5 மணி நேரத்துக்குப் பின்பு மீட்கப்பட்டதால் வயிற்றில் இருந்த சிசுவை இறந்துவிட்டதாக கூவக்காபட்டி வட்டார சுகாதார மருத்துவ அதிகாரி மகேஸ்வரி தெரிவித்தார் மேலும் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுConclusion:திண்டுக்கல் அருகே
நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையோரமாக பிணமாக மீட்பு கழுத்தில் இருந்த 5 சவரன் நகை மாயமானதால் கொலையா என மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை

குறித்த செய்தி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.