திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எப்போதும் பரபரப்பான பகுதியாக அண்ணாசாலை இருந்துவருகிறது. இந்நிலையில், அவ்வழியாக வந்த கொடைக்கானல் நகராட்சி தண்ணீர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் துணிக்கடை வைத்திருந்த சந்தரன் என்பவர் மீது மோதியது. இதில் துணி வியாபாரி படுகாயமடைந்தார்.
இதையடுத்து வாகனத்தை இயக்கிவந்த லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தைவிட்டு தப்பிவிட்டார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் உதவி காவல் ஆய்வாளர் மாதவராஜா, ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்காமல் தனது வாகனத்திலேயே காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தாமாக முன்வந்து உதவிய உதவி காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தான் பயின்ற பள்ளியில் கொடி ஏற்றிய பூரண சுந்தரி ஐஏஎஸ்!