ETV Bharat / state

ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய காவல் துறை! - TamilNadu news

திண்டுக்கல்: கரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருள்களின்றி தவித்துவரும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பண்டக சாலையினரும், காவல் துறையினரும் இணைந்து அரிசி, காய்கறிகள் வழங்கினர்.

police-providing-essential-items-to-poor-people

author img

By

Published : Apr 25, 2020, 3:12 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்‌. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் கூட பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு உதவித் தொகை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை என்பதால், பல்வேறு தரப்பினரும் ஏழை மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேவுள்ள சின்னமாநாயக்கன்கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு பை மற்றும் பலசரக்கு சாமான்களை கூட்டுறவு பண்டக சாலையினராலும், காவல் துறையினராலும் வழங்கப்பட்டது.

ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய காவல்துறை

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று நிவாரண பொருள்களை வாங்கிச் சென்றனர். மேலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய கூட்டுறவு பண்டக சாலையினருக்கும், காவல் துறையினருக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:மதுரையில் கனமழை - கார் மேல் விழுந்த பழமையான மரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.