ETV Bharat / state

காவலர் தூக்கிட்டு தற்கொலை: காவல் துறை விசாரணை!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை: காவல் துறை விசாரணை!

author img

By

Published : Jun 3, 2021, 7:09 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேவுள்ள ஐ.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி தண்டபாணி என்பவரது மகன் நாட்டுதுறை (32). இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், அவர் நேற்றிரவு (ஜூன் 02) பணி முடிந்து திண்டுக்கல் சாலை கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை எதிரே உள்ள கோல்டன் பவர் விடுதியில் தங்கியிருந்தார்.

ஆய்வாளர் சீனிவாசன் செல்போனில் தொடர்பு கொண்டபோது நாட்டுதுறை எடுக்கவில்லை. . இதனால், சந்தேகமடைந்த அவர், நாட்டுதுறையின் அறைக்குச் சென்று பார்த்தபோது அறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை: காவல் துறை விசாரணை!
முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை: காவல் துறை விசாரணை!

இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்னை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.