திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரபு(32). இவர், பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தனது வீட்டருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரபுவின் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த நத்தம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், எதற்காகப் பிரபு கொலை செய்யப்பட்டார் என விசாரணை செய்துவரும் காவல்துறையினர், கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.