ETV Bharat / state

'இதெல்லாம் நல்ல பேசுறீங்க, சட்டத்தை மட்டும் மதிக்க மாட்றீங்க' வெயிலில் நிறுத்திய போலீஸார்! - 144 என்றால் என்ன?

திண்டுக்கல்: 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களில் வந்தவர்களை ஒரு மணி நேரம் நிற்க வைத்து காவல் துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

police-awareness-to-public-about-coronavirus

author img

By

Published : Mar 26, 2020, 12:52 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதனை தடுக்கும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்களிடையே பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்துதல் அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பல இடங்களில் தடை உத்தரவை மீறி மக்கள் தங்களது வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

திண்டுக்கல் நகர் பகுதிகள் மற்றும் காய்கறி சந்தைக்கு இன்று காலை முதல் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக அளவில் பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் வெளியே வரும் நபர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் நகரப் பகுதிகளில் வாகனங்களில் வந்த நபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வாகனங்களில் வந்தவர்களை வெயிலில் நிற்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

பின்னர் அவர்களிடம் 144 தடை உத்தரவு எதற்காக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது, கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு மணி நேரம் நிற்க சாலையில் வைத்தனர். மேலும் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்றால், பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என கூறி அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவிற்கு கிடைத்த முத்தம் - வாயடைத்து போன காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.