திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவின் மாநில பொருளாளர் திலகபாமா, தனது ஆதரவாளர்களுடன் வீரக்கல் அருகே கூத்தம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கிருந்த திமுக வேட்பாளரும் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, திலகபாமாவை கடுமையாக விமர்சித்துத் தரக்குறைவாகப் பேசியதாகவும், திமுக பிரமுகர் காங்கேயன் அவரது ஆதரவாளர்களுடன் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பாமகவினரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில், இரு தரப்பினருக்கும் இடையிலான கைகலப்பில், ஒரு சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த ராமநாதபுரம் மாவட்ட பாமக செயலாளர் ஹக்கீம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, திலகபாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாமக, அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், பாமகவினர் கடந்த சில நாட்களாகவே திமுக வேட்பாளரை ஒருமையில் மிகவும் தரக்குறைவாகப் பேசி வருவதாகவும், இதனாலேயே இரு தரப்பில் உள்ள தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: வேளச்சேரி அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்!