தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இன்று மாலை 3.30 மணி அளவில் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ர்என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மதுரையில் இருந்து திண்டுக்கல் நகரத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல இருப்பதால், நேற்று(நவ-10) பாதுகாப்பு முன்னோட்டம் நடைபெற்றது. இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுட்டுள்ளது.
இந்த விழாவிற்காக 4,500 காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு (நேற்று நவ. 10) காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடியின் தென்னிந்திய பயணம்... முழு விவரம்...