ETV Bharat / state

கொடைக்கானல் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் சிகிச்சைக்காக அனுமதி

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் மன்னவனூர் கிராமத்தை நோக்கிச் சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

Van accident in kodaikanal
பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Sep 12, 2020, 7:04 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம் அருகேயுள்ள மன்னவனூர் பகுதியிலிருந்து கூக்கால் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சாமி கும்பிடுவதற்கு 19 நபர்கள், குடும்பமாக பிக்கப் வாகனத்தில் சென்றுள்ளனர்.

கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, மன்னவனூர் கிராமத்துக்கு அருகில் தண்ணீர்பாறை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணம்செய்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியினர் உடனடியாக அனைவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் 4 குழந்தைகள் உள்பட 8 நபர்களுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து, அவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து விபத்து குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் கண்ணன் (25) அதிவேகத்துடன் இயக்கியதே விபத்து ஏற்படுவதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கடமானை வேட்டையாடிய மூன்று பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.