ETV Bharat / state

ஹிந்தி, ஆங்கிலத்தில் வாக்காளர் பெயர் பட்டியல் : மாற்றி வெளியிட வேண்டி மனு

author img

By

Published : Jan 27, 2021, 7:48 PM IST

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியலில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இடம் பெற்றுள்ளதை நீக்கி வெளியிட வேண்டும் என்று திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஹிந்தி, ஆங்கிலத்தில் வாக்காளர் பெயர் பட்டியல் : மாற்றி  வெளியிட வேண்டி மனு
ஹிந்தி, ஆங்கிலத்தில் வாக்காளர் பெயர் பட்டியல் : மாற்றி வெளியிட வேண்டி மனு

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த 2ஆம் தேதி புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டபேரவை தொகுதி மற்றும் நிலக்கோட்டை சட்டபேரவை தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் தமிழில் பெயர் மாற்றம் செய்து வெளியிட வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஹிந்தி மொழி பதிவிடப்பட்டுள்ளதா என்று திமுகவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர்.

முன்னதாக இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம் செய்யாமலும், ஒரே நபரின் பெயர் இரண்டு மற்றும் மூன்று முறை பதிவு செய்யப்பட்டுள்ளதையும் நீக்கி வாக்காளர் பட்டியலை மீண்டும் சீரமைத்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை ஏற்று வாக்காளர் பட்டியலை சரி செய்து மீண்டும் அளிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:நெசவுத் தொழிலாளர்களின் கைவண்ணத்தில் தேர்தல் சின்னம்; ஆட்சியர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.