திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேரநாயக்கனூர் கிராமத்தில் உள்ள ஊர் பொதுக் குளம் 1975ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்தக் குளம் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக உள்ளது. தற்போது அந்தக் குளத்தை செல்வகுமார் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவர், குளத்தின் மீது நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். அத்துடன் ஜேசிபி மூலம் குளத்தின் கரையை உடைத்துள்ளார். அதனால் குளத்தின் நீர் அருகிலுள்ள விளை நிலங்களில் தேங்கி பயிர்கள் நாசமாகி உள்ளன. அதனால் அப்பகுதி மக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1 லட்சம் கடனுக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, கடை ஆக்கிரமிப்பு