ETV Bharat / state

மூஞ்சிக்கல்லில் நிழற்குடை தேவை - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் நகரின் முக்கியப் பகுதியான மூஞ்சிக்கல்லில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

people-wants-bus-stand-shelter-for-safety-purpose
author img

By

Published : Nov 6, 2019, 2:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சியின் சார்பாக பயணிகள் நிழற்குடை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மலைப்பகுதியான கொடைக்கானலில் அடிக்கடி காலநிலை மாறுபடும். மழை, காற்று, வெயில் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நிழற்குடை அருகே பேருந்துகளுக்கு காத்திருக்க அந்த நிழற்குடை வசதியாக இருந்தது.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்

இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினரால் மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதோடு சேர்த்து பயணிகள் நிழற்குடையும் அகற்றப்பட்டது. இதனால் நகரின் முக்கியச் சந்திப்பில் உள்ள மூஞ்சிக்கல் பகுதியில் பேருந்திற்கு காத்திருக்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளும் மழை, குளிர், வெயில் நேரங்களில் பாதுகாப்பாக நிற்பதற்கு இடமின்றி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் தற்போது மழைக்காலம் என்பதால் மக்கள் மழையில் நனைந்தபடி பேருந்துகளுக்கு காத்திருக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மூஞ்சிக்கல் பகுதியில் பயணிகள் நிழற்குடையினை துரிதமாக அமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் கூடுதலாக கழிப்பறையும் அமைக்க முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கானல் போட் ஹவுஸை இயக்க தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Intro:திண்டுக்கல் 6.11.19

மூஞ்சிக்கல் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சியின் சார்பாக பயணிகள் நிழற்குடை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மலைப்பகுதியான கொடைக்கானலில் அடிக்கடி காலநிலை மாறுப்படும். இருப்பினும் மழை மற்றும் காற்று, வெயில் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நிழற்குடை அருகே பேருந்துகளுக்கு காத்திருக்க வசதியாக இருந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினரால் மூஞ்சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதில் பயணிகள் நிழற்குடையும் அகற்றப்பட்டது. இதனால் நகரின் முக்கிய சந்திப்பில் உள்ள மூஞ்சிக்கல் பகுதியில் பேருந்திற்கு காத்திருக்கும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் மழை, குளிர் மற்றும் வெயில் நேரங்களில் பாதுகாப்பாக நிற்பதற்கு இடமின்றி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் தற்போது மழைக்காலம் என்பதால் மக்கள் மழையில் நனைந்தப்படி பேருந்துகளுக்கு காத்திருக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூஞ்சிக்கல் பகுதியில் பயணிகள் நிழற்குடையினை துரிதமாக அமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் கூடுதலாக கழிப்பறையும் அமைக்க முன்வர வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.