தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து இரண்டாம் நாளாக பெட்ரோல் விலை 100.04 ஆகவும், ஸ்பீட் பெட்ரோல் 102.83 ஆகவும், டீசல் 93.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானை தொடர்ந்து கொடைக்கானலில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.