சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் நாட்டு மக்கள் தங்களுக்குள் மக்கள் ஊரடங்கு ஏற்படுத்தி கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மொத்தத்தில் திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகள் அனைத்தும் எந்தவித பொது போக்குவரத்தும் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணி துறையினர், தூய்மை காவலர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்ற ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு மீட்பு பணித் துறையினர், ஊடகத்துறையினர் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை ஐந்து மணிக்கு திண்டுக்கல் பகுதி மக்கள் தங்களது வீடுகளின் முன்புறம் ஒன்றுகூடி கை தட்டி நன்றி தெரிவித்தனர்.
மேலும் பை பை(Bye Bye) கரோனா கோ கோ(Go Go) கரோனா என குழந்தைகள், பெரியவர்கள் கைகளைத் தட்டி முழக்கமிட்டனர் .
இதையும் படிங்க: வெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட் விளையாடிய ஏரியா புள்ளிங்கோ!