ETV Bharat / state

400 வருட பாரம்பரிய நகரத்தார் காவடி.. பழனி முருகனை காண பாதயாத்திரை! - தைப்பூசம்

நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்த நகரத்தார் காவடிகளுக்கு உற்சாக வரவேற்உ அளிக்கப்பட்டது.

பழனி முருகனை கான பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

author img

By

Published : Jan 31, 2023, 12:25 PM IST

பழனி முருகனை காண பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

திண்டுக்கல்: நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு இன்று காலை பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வைரவேலுடன் வந்து சேர்ந்தன. 291 சர்க்கரை காவடிகள் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கடந்த 29 ஆம் தேதி, அன்று குன்றக்குடியிலிருந்து 19 நாட்கள் பயணமாகப் புறப்பட்டு நத்தம் வந்தடைந்தனர்.

நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாகப் பழனி சென்று முருகனைத் தரிசித்து, காவடி செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம். அதன் பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.

கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது, தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் தங்களது பயணங்களைத் தொடர்ந்து வருகின்றனர். பிப்ரவரி 4 தைப்பூச தினத்தன்று பழனி சென்றடைந்து, அதன் பின் பிப்ரவரி 6 மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.

நத்தம் வாணியர் பஜனை மடத்தில் இன்று காலை பானக பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் புறப்பட்டன. காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கிப் புறப்பட்ட இக்காவடிகளுக்கு நத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களால் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது நகரத்தார்களின் சிறப்பம்சமாகும்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த பிரேசில் தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.