திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இங்கு விடுமுறை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், அங்கு குற்றச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன.
குறிப்பாக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பிரையண்ட் பூங்கா பகுதி, ஏரிச்சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அவ்வாறு பொறுத்தப்பட்ட சில சிசிடிவி கேமராக்கள் தற்போது பழுதடைந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.
இது குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. எனவே, நகரின் முக்கியப் பகுதிகளில் மட்டுமின்றி பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கிராமப் பகுதிகளிலும் சிசிடிவி கேமாராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஐஐடி மாணவி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை' - தலைவர்கள் வலியுறுத்தல்!