கொடைக்கானலுக்கு பண்டிகை தினங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கரோனா பெருந்தொற்றின் காரணமாக சுற்றுலா முடங்கி இருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துவருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு, தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு பலஆயிரம் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஆரவாரமின்றி காணப்படுகிறது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மோயர் பாயிண்ட் , குணா குகை , தூண்பாறை , பாம்பார் அருவி , வட்டகானல் அருவி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்து புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மேலும், அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளால் முடங்கியிருந்த வியாபாரம், தற்போது நடைபெற்றுவருவதாக வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு: கோயில்களில் சாமி தரிசனத்திற்கு காலை 6 மணி முதல் பக்தர்கள் அனுமதி!