தமிழ்நாட்டில் வேகமெடுத்துள்ள கரோன தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, இன்று (ஏப்.10) முதல் மீண்டும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலிலும் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி,
- பழனி முருகன் கோயிலுக்கு வர ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- 10 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும்
என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை