திண்டுக்கல் மாவட்டம் 34ஆவது வார்டு பி.ஏ.கே. காலனியில் மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் சாக்கடைத் தேங்கும் குளமாக மாறிவருகிறது.
இதனைக் கண்டித்தும், பூங்காவாக மாற்றி அப்பகுதியின் சுகாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தியும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
இதில் தமிழ்நாட்டில் 4ஆவது சிறந்த மாநகராட்சியாக அரசால் அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பல வார்டுகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாமல், தூர்வாரப்படாமல், பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு, மலேரியா, காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கழிவுநீர் குளமாக மாறிவரும் தங்கள் பகுதியின் சுகாதாரத்தை மீட்டெடுக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் பொறியாளரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: கழிவுநீர் கால்வாய் பிரச்னை; ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட பெண்கள்!